KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Sunday, June 29, 2008

வானத்திலே திருவிழா

14 months in the making, 42 countries, and a cast of thousands. Thanks to everyone who danced with me

To felicitate MADAM THULASI AND HER FAMILY ON HER SUCCESSFUL AND PLEASANT
JOURNEY INTO THE WONDERLAND OF NORFOLK.



Where the Hell is Matt? (2008) Mattharding





Village Annual Festival
வானத்திலே திருவிழா




இவுக எல்லாமே எங்க ஊரு ஜனங்க.
ஆஸ்டிரேலியா, ந்யூ ஜீலேன்டு, ஐரோப்பா, அமெரிக்கா அப்படின்னு
டூர் போகணும்னா ஒரு ஆபீஸ்லே வேலை பாக்கணும் . லீவ் டிராவல்
கன்செஷன் இருந்தால் போகலாம்.
பாவம் .. எங்கே போவாக இவுக ..
அதுனாலே தங்க ஊரிலேயே வருசத்துக்கொருதரம்
கொண்டாடராங்களாம்.
இப்படி ஒரு பாட்டும் பாடறாங்களாம்.
நிசமாத்தான்.
நீங்க வேணா உங்க வலையுலகத்திலே
சிறு முயற்சி செய்யறவங்க யாருன்னு பார்த்து கேளுங்க.

வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்
எட்டுத் திசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே
தெருவெல்லாம் வெள்ளமே
திண்ணையோரம் செல்லுமே
பார் முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
தவளை மட்டும் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டு தோறும் வாடிக்கை

Courtesy:

4 comments:

Dammam Bala (தமாம் பாலா) said...

தஞ்சை சூப்பர் சுப்பு தாத்தாஜி!

மல்டி மீடியா பதிவுலே சும்மா கலக்குறீங்களே..
மீனாட்சி பாட்டியும்,பேராண்டி பிச்சையும் நலம் தானே?

எங்க வீட்டுக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி! என்னோட போபால் தாத்தா பற்றி கூட ஒரு பதிவு போட்டிருக்கேன். நேரம் கிடைக்கும் போது பாருங்க. உங்க வானத்துல திருவிழா படிச்சதும் நுங்கும் நுரையுமா வெள்ளம் ஓடற ஃபீலிங்!

நேத்து கூட பிள்ளைகள் கிட்ட தஞ்சை முத்துப்பலக்கு, பச்சகாளி/பவளகாளி பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன், ஹூம்.. அது ஒரு பொற்காலம்!!

என்றும் அன்புடன்
தமாம் பாலா
www.bala-win-paarvai.blogspot.com

sury siva said...

பாலா அவர்களுக்கு நன்றி

நீங்கள் தஞ்சையா ! இப்போது எங்கிருக்கிறீர்கள்? உங்கள் ஊருக்கு வராமலா !
அவசியம் வருகிறேன்.




சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com

ராமலக்ஷ்மி said...

//இடி இடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூரல் ஒரு தோரணம்
தூய மழை காரணம்//

அருமை. அடுத்த முறை வருண பகவான் கருணையால், தூரலின் தோரணத்தால் அழகு படுத்தப் பட்ட வான மேடையில் இடியின் பக்க வாத்தியத்துடன் மின்னல் நாட்டியமாடுகையில் உங்கள் வரிகள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகி விடும்.

sury siva said...

மேடம் ராமலக்ஷ்மிக்கு வணக்கம்.

பாட்டுக்கு மெட்டு அமைத்தது தான் நான்.

பாடல் இயற்றியது தமிழ் வலையுலகக் காளமேகப்புலவர்
கவி நயா மேடம் அவர்கள்.

அவர்களுக்கு உங்கள் நன்றியை டெலிபதி மூலம்
அனுப்பி விட்டேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.