KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Monday, March 9, 2009

ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ

அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தா பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் - என் செல்வமகன்
வாய்திறந்தால் தேனொழுகும்

கண்ணே உறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்தின் வண்டுறங்கு

தேனே திரவியமே
தெவிட்டாத செந்தேனே
கோனே குலவிளக்கே
கோமகனே கண்வளராய்

தேடக் கிடைக்க்காத
திரவியமே தேன்கடலே
பாடப் படிக்கவந்த
பாக்கியமே கண்வளராய்
வாடாத பூவே
தெள்ளமுதே கண்வளராய்
சீரார் பசுங்கிளியே
செல்வமே சீமானே
ஆரார் பசுங்கிளியே
அன்னமே கண்வளராய்

சந்திரரோ சூரியரோ
சந்திரமதி பாலகரோ
உமையாள் ஈன்றெடுத்த
சிவக்கொழுந்தே கண்வளராய்

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கண்ணே உறங்கு
கானமயில் நீஉறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்து வண்டுறங்கு

மயிலே உறங்கு
மரகதமே கண்ணுறங்கு
குயிலே உறங்கு
குஞ்சரமே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

***

படத்துக்கு நன்றி: http://www.blogger.com/post-create.g?blogID=1582304199587288431

எழுதியவர் கவிநயா

ANOTHER WONDERFUL LULLABY written by Madam Meena muthu.

Please click at the name of the author to log on to the blog of the author.

1 comment:

meenamuthu said...

அன்று என் தாலாட்டு வலை பக்கத்தில் தங்களின் பின்னூட்டம் கண்டு இங்கு வந்து, தாங்கள் பாடிய (என் வலைத்தளத்தில் உள்ள) தாலாட்டை கேட்க முயன்று முடியவில்லை. அதோடு இன்றுதான் மீண்டும் முழுதுமாக கேட்டேன்!

மிக நன்றாக உள்ளது! தங்களின்(தளம்) முயற்சிகண்டு அதிசயித்து நிற்கிறேன்!

மிகவும் நன்றி.

இப்படி தாமதமாக வந்ததற்கு மன்னியுங்கள்!

அன்புடன்
மீனா.