KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Monday, February 23, 2009

ஆனை பாரு யானை பாரு


Courtesy: Madam Kavinaya
Courtesy: http://kavinaya.blogspot.com
ஆனை பாரு யானை பாரு
ஆடி அசைஞ்சு வருது பாரு!
கறுப்பு யானை கம்பீ ரமா
நாட்டை நோட்டம் விடுது பாரு!

தூணைப் போலக் காலைப் பாரு
நீண்ட தும்பிக் கையைப் பாரு!
முறத்தைப் போலக் காதைப் பாரு
விசிறி வீசும் அழகைப் பாரு!

மலையைப் போல உடம்பைப் பாரு
கடுகைப் போலக் கண்ணைப் பாரு!
குட்டிக் குட்டி வாலைப் பாரு
குனிய வச்சு ஏறிப் பாரு!

நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு
பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!
வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
வாகாய் உரிச்சுத் தின்னும் பாரு!

கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு
காத தூரம் கேட்கும் பாரு!
பிள்ளை யாரு முகத்தைப் பாரு
உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!

ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!


--கவிநயா

எழுதியவர் கவிநயா at 8:30 PM 9 கருத்துகள்

1 comment:

M.Rishan Shareef said...

அருமையாகப் பாடியிருக்கீங்க.. திரும்பத் திரும்பக் கேட்க வைக்குது..பாராட்டுக்கள் நண்பரே !