
வாங்க எல்லோரும் வாங்க !
வந்து கணபதியை வழிபடுங்க.
வினைகள் எல்லாம் தீர்க்க வல்ல
வினாயகனை வழிபடுங்க.
துளசி டீச்சர் வலையிலே இருக்கிற இந்த கோவில் மாதிரி எங்க அபார்ட்மென்ட் லேயும்
இப்படி ஒரு வினாயகர் கோவில் வரணும். அதற்கு அந்த வினாயகர்
அருளும் வேண்டும். ஆமாம். எல்லாத்துக்கும் நம்பிக்கை வேணும்
அந்த தும்பிக்கையானைத் துதித்தால் எல்லா விக்னங்களும்
அகன்று வினாயகர் கோவிலும் வரும். கட்டி முடிச்சோன்ன
ந்யூ சிலேந்து துளசி டீச்சர் வந்து
கோவில் கும்பாபிஷேகத்துலே கலந்துப்பாரு.
இங்கே வரவங்க எல்லோரும் பாட்டைக் கேட்டுவிட்டு வினாயகர்
பிரசாதம் வாங்கிகினு போங்க.
வினாயகனே வினை தீர்ப்பவனே
வேழமுகத்தோனே ஞால முதல்வனே
(வினாயகனே)
குணானிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
(வினாயகனே)
உமாபதியே உலகம் என்றாய்
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்
கண நாதனே மாங்கனியை உண்டாய்
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்
(வினாயகனே)
Gum Ganapathaye Namaha by Ms.NithyaShree Mahadevan .. Hamsadwani
Adi (Tisra) - Harikesanallur Muthiah Bagavathar
3 comments:
பாட்டி பாட நாங்களும் பிரார்த்தனையில் கலந்து கொண்டோம்.
//எல்லோரும் பாட்டைக் கேட்டுவிட்டு வினாயகர்
பிரசாதம் வாங்கிகினு போங்க.//
விநாயகர் அருளால் மொத பிரசாதம் எனக்கா..எனக்கேதானா:))! நன்றி!
ஆஹா, யானை கொள்ளை அழகு. கோவில் கட்டி முடிச்சாசா? இல்ல வேலை நடந்துண்டு இருக்கா?
நித்யஷ்ரி அவர்களின் பாடலும் மிக அருமை. உங்க அப்பட்ர்மெண்ட் ஏரியா ரொம்ப அழகா இருக்கு. :)
2/3 bedroom Flats என்ன விலை சொல்றாங்க இப்போ?
Post a Comment