உலகை ரட்சிக்கும் எம் பெருமானுடன்
ஊஞ்சலிலே ராஜ ராஜேஸ்வரி அம்பாளும்-
அடுக்கு விளக்குகளும்-
கோலக் கமலங்களூம்!
Courtesy: http://tamilamudam.blogspot.com
Sri Chakraraja simhasanesWari Sri LalithambikayE
தேவி ராஜ ராஜேஸ்வரி பரமேச்வரி சிம்மாசனேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகை எனப்
பலவிதமாகவே அம்மனை அழைத்து அவளது அருள் பெற தமிழகமனைத்தும்
உள்ள இல்லங்களில் எல்லாம் பாடப்பெறும் இப்பாடல்.
எங்கள் வேண்டுகோளை ஏற்று இப்பாடலைப் பாடும் எங்களது காலனி தோழி
அவர்களுக்கு எங்களது இதய பூர்வமான நன்றி.
இது ஒரு ராகமாலிகையாகப் பாடப்பெறுவது. முதலில் செஞ்சுருட்டியில் துவங்கும்.
பிறகு வருவது புன்னாக வராளி, மூன்றாவதாக வருவது நாத நாமக்ரியை.
கடைசியில் நான்காவது வருவது சிந்து பைரவி.
இப்பாடலை மஹாராஜபுரம் சந்தானம், பாம்பே ஜெயஸ்ரீ, அருணா சாயிராம்,
நித்யஸ்ரீ ஆகிய பிரபல பாடகர்களும் பாடியிருக்கின்றனர்.
நவராத்திரி சமயத்தில் இதைத் தினந்தோறும் பாடி மகிழ்வது வழக்கம்.
2 comments:
பாடலைப் பாவத்துடன் அருமையாகப் பாடியிருக்கும் சகோதரிக்கும் தங்கள் முயற்சிக்கும் முதற்கண் என் பாராட்டுக்கள்.
நான் நித்தம் வணங்கும் ராஜேஸ்வரியையே இங்கே எழுந்தருளச் செய்திருப்பீர்கள் என்பது நான் எதிர்பாராத ஒன்று. நன்றி. இப்படமானது என் மே பிட் போட்டி 'ஜோடி' தலைப்புக்காக எனது பூஜை அறையில் எடுத்தது. http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html எம்பெருமானும் அம்பாளும் ஜோடியாகக் காட்சி தர, விளக்குகளும் அம்பாளின் பாதக் கமலங்களில் கோலக் கமலங்களும் என்ற வகையில் எடுத்தேன். இப்படத்தின் மூலமானது எனது தாத்தா பூஜித்து வந்த சுமார் எழுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய (4' * 3')தஞ்சாவூர் ஓவியமாகும். நாங்கள் வளர்ந்த இல்லத்திலே இன்னும் என் பெரியப்பா குடும்பத்தினரால் வழிபடப் பட்டு வருகிறது. அந்த மூலப்படத்தின் புகைப் படத்தைக் கொடுத்து சகோதரிகள் நாங்களும்(சின்னத் தங்கையின் பெயர் ராஜராஜேஸ்வரி), அம்மாவும் அதே போல தஞ்சாவூரிலிருந்து செய்து தருவித்து அவரவர் இல்லங்களில் வழிபட்டு வருகிறோம். தஞ்சையைச் சேர்ந்த தாங்கள் இத் தகவலையும் ரசிப்பீர்கள் எனத் தந்தேன்.
பாடலைப் பாடிய சகோதரிக்கு என் பாராட்டை மறக்காமல் தெரிவியுங்கள்.
//பாடலைப் பாடிய சகோதரிக்கு என் பாராட்டை மறக்காமல் தெரிவியுங்கள்//
done
meenakshi paatti
thanjai.
Post a Comment