KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Friday, October 3, 2008

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா




Please click at the title or cut and paste the URL below: to move on to blog:
http://kavinaya.blogspot.com

தாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா
தங்கத்தைப் போலே ஜொலித்திருப்பாய்
வாமனனாம் அந்த மாதவன் மார்பினில்
வாசனை மலராய் முகிழ்த்திருப்பாய்
http://kavinaya.blogspot.com

மலரும்உன் வதனமும் ஒன்றெனவேமது
வண்டுகளும் மயங்கும் விந்தையென்ன?
வளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்
தயங்கித் தானும் தேய்வதென்ன?

கதி ரொளியோஉன் கண்ணொளி எனவே
கமலங்கள் இரவிலும் மலர்வதென்ன?
குழ லொலியோஉன் குரலொலி எனவே
கோகிலங் களும்தலை குனிவதென்ன?

தங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய
மெல் லடி களைப்பின் தொடர்வதென்ன?
உந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்
நாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன?

உன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்
உன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்
உந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்
உன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்!

MAY GODDESS LAKSHMI AS ALSO
GODDESS SARASWATHI BLESS MADAM KAVINAYA AND HER FAMILY MEMBERS AND FRIENDS WITH ALL THAT THEY RICHLY DESERVE.

1 comment:

Kavinaya said...

எழுதி வாசிக்கிறதை விட பாடிக் கேட்கும் போதுதான் நெகிழ்ச்சி அதிகமாக இருக்கு. அதற்காக உங்களுக்கு என்றென்றும் நன்றிகள். நான் ரெண்டு மூணு பாடலுக்கு இதையே சொல்லிட்டேன் - ஆனா இதுவும் நானே பாடிக் கொண்ட அதே மெட்டில் அமைந்திருப்பது கண்டு ரொம்ப சந்தோஷமா இருந்தது. மீண்டும் நன்றிகள் தாத்தா.