KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Tuesday, September 30, 2008

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே


PLEASE CLICK AT THE TITLE TO LOG ON TO: (OR CUT AND PASTE THE URL HERE:)
http://kavinaya.blogspot.com




Madam Kavinaya has recited a song eulogizing Goddess Durga on the occasion of Navarathri.
I have composed this song in Raag Mohanam. You will be listening the Raag Mohanam in instrumental for the first two minutes, followed by the song sung by me.
I have also posted the picture of GODDESS GARBA RAKSHAMBIGAI.

வீரதுர்க்கை வடிவெடுத்து வினைகள் தீர்க்க வந்தவள்!
தீரவேங்கை யாகி வந்து அசுரர்களை வென்றவள்!

கோபத்திலே தகதகத்து நெருப்பைப் போல ஜொலிப்பவள்!
வேகத்திலே சுழன்றடித்து காற்றைக் கூட ஜெயிப்பவள்!

மோகத்திலே உழலும் மனதின் மாயம் நீக்குகின்றவள்!
சோகத்திலே துவளும் போது தோள் கொடுக்கும் தாயவள்!

தேவருக்கு அருள வென்றே தோற்றம் கொண்டு வந்தவள்!
மூவருக்கும் முதல்வியாகி முத் தொழில்கள் புரிபவள்!

காளி யாகி வந்த போதும் கனிந்த அன்பால் குளிர்ந்தவள்!
நீலியாகி சூலியாகி தீமை எரிக்கும் தீ அவள்!

ஆயுதங்கள் ஏந்திக் கொண்டு அச்சம் நீக்க வந்தவள்!
பாயும் கங்கை சூடு வோனை பாதம் சூடி கொண்டவள்!

நேசம் கொண்ட நெஞ்சுக்குள்ளே தேசு கொண் டொளிர்பவள்!
வீசும் தென்ற லன்பில் எந்தன் மாசு நீக்கு கின்றவள்!

சரண மென்று பதம் பணிந்தால் சஞ்சலங்கள் தீர்ப்பவள்!
வரணு மென்று தொழுது நின்றால் வாசல் வந்து காப்பவள்!

ஏழுலகும் ஆளுகின்ற எங்கள் அன்னை வாழ்கவே!
எட்டுத் திக்கும் ஏத்தும் எங்கள் அன்னை அடிகள் பணிகவே!

WE PRAY TO GODDESS DURGA TO SHOWER ALL HER BEST ON ALL
WHO WORSHIP HER ON THESE NINE DAYS OF NAVRATHRI.

OUR BLESSINGS TO MADAM KAVINAYA AND HER FAMILY MEMBERS AND FRIENDS.

2 comments:

ராமலக்ஷ்மி said...

இசையும் இனிமை.பாடியிருப்பதும் அருமை. உங்கள் அனைவருக்கும் என் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

Kavinaya said...

ரொம்ப நல்லாருக்கு தாத்தா! மிக்க நன்றியும் நவராத்ரி வாழ்த்துகளும்!